தமிழர்களுக்கு சம உரிமையை மறுத்து வரும் சிங்கள அரசு இறையாண்மை என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ் இனத்தையே குண்டு வீசி அழித்து வருகிறது.
தமிழகத்தை உள்ளடக்கிய இந்தியாவும் உலக நாடுகளும் இதனைப் பார்த்துக்கொண்டு மவுனம் சாதித்து வருவது வேதனை அளிக்கிறது.
குடும்பமாக இருந்தால் கூட பிரச்சினை என்றால் பாகப்பிரிவினை வழங்கப்படுகிறது. திருமண வாழ்க்கை என்றாலோ மனதிற்கு பிடிக்கவில்லை என்றால் மணவிலக்கு உண்டு.
ஆனால் நாடு என்று வந்துவிட்டால் மட்டும், அடிப்படையான சம உரிமை வழங்காவிட்டால் கூட ஒன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது என்ன நியாயம் ?
ஆனால் இறையாண்மை என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு இனத்தைக் குழிதோண்டிப் புதைப்பது நியாயமா ? இதற்கு உலக நாடுகள் துணை போகலாமா ?
உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிக்காட்டி நியாயத் தீர்வு காண முயற்சிப்போம். கொசாவொ மலர்ந்துள்ள நிலையில் ஒருமித்து குரல் எழுப்ப இதுவே சரியான தருணம்.
தோழமையுடன்
ஜெயகார்த்தி
Filed under: Uncategorized



attach my name sir