நாராயணசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக 5 அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இவர்களுக்கு ஆதரவாக இருந்தவர் அம்மமாநிலத்தைச் சேர்ந்த நாராயணசாமி.
முதலமைச்சர் தங்களை செயல்பட அனுமதிக்கவில்லை என்பது அமைச்சர்களின் புகார். முதல்வரின் தொகுதியிலேயே வேலை வாய்ப்புகளும் நலத்திட்டங்களும் குவிந்து வருவதாக எதிர்க்கட்சிகளின் புகார்.
ஆளும் கட்சி அமைச்சர்களின் நீண்ட போராட்டத்தின் பலனாக கிடைத்திருப்பதோ  நாராயணசாமிக்கு மத்திய  அமைச்சர் பதவி.
எப்படி இருந்தாலும் இதன் பிறகாவது அமைச்சர்களும் முதல்வரும் மோதலைக் கைவிட்டு மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவார்களா என்பதே சாதாரண மக்களின் கேள்வி.