சின்னஞ் சிறு நாடுகள் விடுதலையை
ஏற்பவர்கள் என்னருந் தமிழ்ஈழ விடுதலையைத்
தடுப்பதா? -நந்திவர்மன் பொதுச்செயலர்
திராவிடப்பேரவை
உலக நாடுகள் மன்றம் சின்னஞ் சிறு நாடுகளின் விடுதலை வேட்கையைத் தணித்து வருகிறது. தனி நாடுகளாக பல நாடுகள் ஏற்கப்படும் காலம் கனிந்து வருகிறது.
சோவியத் ஒன்றியம் சிதறிப் போகும் முன்னர் இருந்த சியார்சியாவில் தன்னாட்சியுடன் இயங்கிய பகுதி சௌத்ஒசட்டியா ஆகும். 1506 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் 70,000 மக்கள் அங்கு வாழ்ந்தனர். விடுதலை கோரி மக்கள் இருமுறை பொது வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர். [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | Leave a Comment »
